Email : eramsenthilkumar@gmail.com

Wednesday, February 19, 2014

நிச்சயம் தவிர்க்க வேண்டிய அதிக கலோரிகள் கொண்ட உணவு வகைகள்..!





உணவு என்பது நாம் வாழ்வதற்கு தேவைப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அது மருந்தை போலத் தான். அதிலும் ஆரோக்கியமான உணவை தேவையான அளவு உட்கொண்டால், உடல் ஆரோக்கியமாக விளங்கும். அதுவே ஆரோக்கியமில்லாத உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலில் பல வியாதிகள் வந்து சேரும். சில இந்திய உணவு வகைகளில் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் அவரைகள் போன்ற சத்துள்ள பொருட்களை சேர்ப்பதால், அவைகள் ஆரோக்கியமான உணவுகளாக விளங்கும்.

ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கும், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் வேண்டுமானால், கூடுதல் கலோரிகளை கொண்ட சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பாவ் பாஜி

பாவ் பாஜி என்பது மராத்திய வகை துரித உணவாகும். பாவ் பாஜியில் மல்லிச்செடி, வெங்காயம், எலுமிச்சை சாறு கலந்த பாஜி (அடர்த்தியான உருளைக்கிழங்கு க்ரேவி) மற்றும் வாட்டிய பாவ்வும் (பன்) இருக்கும். இந்த பாவ்வின் அனைத்து பக்கங்களிலும் வெண்ணெய் தடவப்படும்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு தட்டில் தோராயமாக 600 கிலோ கலோரிகள் இருக்கும்.

பன்னீர் புர்ஜி

பன்னீர் புர்ஜி ஒரு சிறந்த காலை உணவாகவும் விளங்கும். சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் சேர்த்து இதனை இரவும் உண்ணலாம்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு மீடியம் அளவு கிண்ணத்தில் தோராயமாக 412 கிலோ கலோரிகள் இருக்கும்.

ஃபலூடா

ஃபலூடா என்பது குளிர்ந்த இனிப்பு வகையை சேர்ந்த ஒரு பானமாகும். ரோஸ் சிரப், சேமியா, ஜெல்லி மற்றும் மரவள்ளிக்கிழங்கு பால், தண்ணீர் அல்லது ஐஸ் க்ரீமுடன் சேர்த்து இதனை தயாரிக்கலாம்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு பெரிய டம்ளரில் தோராயமாக 300 கிலோ கலோரிகள் இருக்கும்.

பட்டர் சிக்கன்

அடிப்படையில் வடஇந்திய உணவான பட்டர் சிக்கன் ஒரு புகழ் பெற்ற உணவு வகையாகும். இது கிடைக்காத இந்திய உணவகங்களே இல்லை என்று கூட கூறலாம். முந்திரி, பாதாம், தக்காளி மற்றும் வெண்ணெயை கொண்டு தயாரித்த க்ரீமி சாஸில் சமைத்த சிக்கனை போட்டு செய்யப்படுவது தான் பட்டர் சிக்கன்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 490 கிலோ கலோரிகள் இருக்கும்.

சோலே படூரே

சனா பூரி என்றும் அழைக்கப்படும் இந்த உணவு கொண்டைக்கடலை மற்றும் பூரியுடன் சேர்த்து உண்ண வேண்டும்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 450 கிலோ கலோரிகள் இருக்கும்.

ரசமலாய்

ரசமலாய் என்பது மற்றொரு புகழ் பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். ரச என்றால் ஜூஸ் என்றும், மலாய் என்றால் க்ரீம் என்றும் பொருள்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 250 கிலோ கலோரிகள் இருக்கும்.

ஜிலேபி

ஜிலேபி என்பது மற்றொரு புகழ் பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். கோதுமை மாவை வட்ட வடிவில் நன்றாக பொறித்து, பின் சர்க்கரை சிரப்பில் ஊற வைத்து செய்யப்படுவது தான் ஜிலேபி. இந்த பலகாரத்தை வெதுவெதுப்பாகவோ அல்லது ஆற வைத்தோ உண்ணலாம். மெல்லக்கூடிய வகையில் இருக்கும் இந்த பலகாரத்தின் வெளிப்புறம் சர்க்கரை கற்களால் சூழப்பட்டிருக்கும்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 459 கிலோ கலோரிகள் இருக்கும்.

அல்வா

அல்வா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அடர்த்தியான இனிப்பு வகையை சேர்ந்த அல்வா இந்தியாவின் புகழ் பெற்ற இனிப்பு வகையாகும். அல்வாவில் பல பொருட்களும் சேர்க்கப்படலாம். அதில் சூரியகாந்தி விதைகள், நட்ஸ், பீன்ஸ், பருப்புகள், கேரட், பூசணி, சேனைக்கிழங்கு போன்றவைகள் சில உதாரணங்கள்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 570 கிலோ கலோரிகள் இருக்கும்.

பர்பி

இந்திய இனிப்பு வகையில் ஒன்றான பர்பி செவ்வக வடிவில் இருக்கும். சர்க்கரை கலந்த பாலில் உலர்ந்த பழங்கள் மற்றும் மிதமான மசாலாக்கள் சேர்த்து, பாலை சுண்ட காய்ச்சி தயாரிக்கப்படுவது தான் பர்பி. பின் அதனை ஒரு தட்டையான தட்டில் ஊற்றி, அதனை சின்ன துண்டுகளாக வெட்ட வேண்டும். இந்த துண்டுகளை உண்ணக்கூடிய சில்வர் தகடு மூலம் அலங்கரிக்கலாம்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு துண்டில் தோராயமாக 103 கிலோ கலோரிகள் இருக்கும்.

நாண் ரொட்டி

நாண் ரொட்டி என்பது ஓவனில் வாட்டி தட்டையாக சமைக்கப்படும் ரொட்டி வகை உணவாகும்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு நான் ரொட்டியில் 317 கிலோ கலோரிகள் இருக்கும்.

மட்டன் கீமா

குறும்பாட்டு கறியை காரசாரமான மசாலாக்கள் மற்றும் பச்சை பட்டாணியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இது.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 502-562 கிலோ கலோரிகள் இருக்கும்.

மட்டன் ரோகன் ஜோஷ்

ரோகன் ஜோஷ் என்ற வாசனையான மட்டன் உணவு புகழ் பெற்ற காஷ்மீரி உணவாகும். இதனை அதிகபட்ச வெப்பத்தில் சமைக்க வேண்டும்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 589 கிலோ கலோரிகள் இருக்கும்.

கோழி குழம்பு

கோழி குழம்பு என்பது ஒரு பொதுவான சுவைமிக்க இந்திய உணவாகும். கோழி மற்றும் குழம்பு கலந்து செய்யப்படுவது தான் இந்த உணவு. இதில் சேர்க்கப்படும் மசாலா பொடிகளில் போக குங்குமப்பூ, இஞ்சி மற்றும் இதர பொருட்களையும் சேர்க்கலாம்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 583 கிலோ கலோரிகள் இருக்கும்.

சிக்கன் டிக்கா மசாலா

வறுத்த கோழி கறி துண்டுகளை காரசாரமான கிரேவியில் போட்டு தயார் செய்வது தான் சிக்கன் டிக்கா மசாலா. காரசாரமான ஆரஞ்சு நிறமுடைய க்ரீமி உணவு இது. இது நம் இந்திய பாரம்பரிய உணவே அல்ல. சிக்கன் டிக்காவை போல் உள்ளதால், முகலாய உணவு வகையான இது இப்பெயரை பெற்றது. இருப்பினும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது இது.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு சின்ன பௌலில் 438-557 கிலோ கலோரிகள் (வெண்ணெய் உபயோகத்தை பொருத்தது) இருக்கும்.

வெங்காய பஜ்ஜி

இந்த காரசாரமான இந்திய நொறுக்குத் தீனி உருளைக்கிழங்கு பஜ்ஜியை போன்றது தான். பல வடிவங்களில் செய்யப்படும் பஜ்ஜியை பல இந்திய உணவுகளை உண்ணும் போது அதனுடன் சேர்த்து உண்ணலாம். தனியாகவும் உண்ணக்கூடிய இந்த உணவு மிகவும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 2-3 பஜ்ஜிகளில் 190 கிலோ கலோரிகள் இருக்கும்.

புலாவ்

சாதத்தில் சுவையை சேர்க்க மசாலாக்கள் சேர்த்து, அதில் கோழி, காய்கறி அல்லது மீனின் ஸ்டாக் போன்றவற்றை சேர்த்து சமைக்கும் உணவு தான் புலாவ்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை உட்கொள்ளும் அளவில் தோராயமாக 449 கிலோ கலோரிகள் இருக்கும்.

மெட்ராஸ் சிக்கன்

சிக்கன், பன்றிக்கறி, மாட்டிறைச்சி, ஆட்டுக் கறி மற்றும் கொத்துக்கறி போன்றவைகளை வைத்து இந்த காரமான குழம்பை தயாரிக்கலாம்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 100-200 கிராமில் தோராயமாக 450-500 கிலோ கலோரிகள் இருக்கும்.

தந்தூரி சிக்கன்

தந்தூரி சிக்கன் என்பது மிகவும் புகழ் பெற்ற இந்திய உணவாகும். வறுத்த கோழி, தயிர் மற்றும் மசாலாக்களை கொண்டு தயார் செய்யப்படும் உணவு இது. இதன் மூலம்

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு கோழியின் காலில் தோராயமாக 264-300 கிலோ கலோரிகள் இருக்கும்.

சமோசா

சமோசாவானது உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பட்டாணிகள் சேர்த்து செய்யப்படும். மிகவும் புகழ் பெற்ற நொறுக்குத் தீனியாக விளங்கும் சமோசா, மாலை நேரங்களில் உண்ணப்படும். இதனை தயாரிக்க உருளைக்கிழங்கு மசாலா, கோழி (அரிதாக), காய்கறி, எண்ணெய் மற்றும் உப்பு தேவைப்படும்.

இதனால் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 2 சைவ சமோசாவில் தோராயமாக 260 கிலோ கலோரிகள். அதுவே 2 அசைவ சமோசாவில் 320 கிலோ கலோரிகள் இருக்கும்.

கோழி குருமா

மிதமான க்ரீமி வகை உணவான கோழி குருமா பல இந்திய வீடுகளில் தயார் செய்யப்படும் உணவாகும். கோழி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி செய்யப்படுவது தான் இந்த உணவு.

இந்த உணவில் தோராயமாக 800-870 கிலோ கலோரிகள் இருக்கும்.

No comments:

Post a Comment